Archive for the ‘திருமறையின் திறப்பு’ Category

திருமறையின் திறப்பு

surathul-fathiha

“சூரத்துல் பாத்திஹா” எனப்படும் தித்திக்கும் திருமறையின் திறப்பு வசனத்திற்கு இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர், கவியரசு கண்ணதாசன்  உட்பட எத்தனையோ கவிஞர்கள் அவரவர் பாணியில், கருத்து மாறாத அளவில். கவிதை வடிவம் அளித்துள்ளார்கள்.

கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களின் கன்னித்தமிழாக்கம் இது :

பேரருளும் பேரன்பும் மிக்க அல்லாஹ்
…..பெருமை மிகும் பெயரதனால் துவக்கம் செய்வோம்
பூரணமாம் புகழினுக்கே உரிமை யாளன்
…..படைப்பினங்கள் அத்தனையும் படைத்துக் காப்போன்
பேரருளும் பேரன்பும் மிக்க நாயன்
…..பார்முடிவின் தீர்ப்புநாள் அதிப னாகும்
பேரரசே! உன்னையே வணங்கி உன்றன்
…..பேரருளை வேண்டி நின்றோம் நின்னருள் பெரற்றோரின்
நேர்வழியில் செலுத்திடுக! நீமுனிந்தோர்
நெறிபிறழ்ந்தோர் செல்லும்வழி தன்னிலன்றே.

– அப்துல் கையூம்