ஒரு பழைய பாரசீகப் பாடல் இது:
அந்த புதிய ரோஜா
ஆழ்ந்த துயரத்தில் கிடந்தது.
அதன் கண்ணீர்த் துளிகள்
மண்ணில் சொட்டிக் கொண்டிருந்தன.
பறந்து வந்த
வண்ணத்துப்பூச்சி கேட்டது,“ரோஜாவே…
ஏன் அழுகிறாய்?
உன்னைப் புகழ்ந்து
அந்த கவிஞன்
பாடவில்லை என்பதனாலா..?”ரோஜா சொன்னது,
“அதனாலல்ல;
அவனுடைய கவிதைகளின்
ஒரு வார்த்தையாக இல்லாமல்
போனேனே என்பதனால்.. ..”
அந்த கவிஞர் வேறு யாருமல்ல; கவிஞர் சாரண பாஸ்கரனாரே தான்!
ஏவி.எம்.நஸீமுத்தீன்
துபாய்
15.01.1977
(ஜனவரி 27,19977-ல் தென்றல் மன்றம் பதிப்பித்த கவிஞர் திலகம் ‘சாரண பாஸ்கரனாரின் கவிதைகள்’ என்ற நூலுக்கு வழங்கப்பட்ட அணிந்துரை)