Archive for the ‘பாவேந்தரின் புகழாரம்’ Category

பாவேந்தரின் புகாழாரம்

bharathidasan1

1957 – ஆம் ஆண்டில் திருச்சி வானொலி நிலையம் ‘வானொலி வார’  விசேஷ நிகழ்ச்சியாக ஒரு சிறப்புக் கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தது. “தமிழ் காட்டும் நல்லுலகு” என்ற கருத்தை  ஒட்டி பல்வேறு துணைத் தலைப்புகளில் புகழ்பெற்ற மாபெரும் கவிஞர்கள் கவிமழை பொழிந்தனர். 

பேராசிரியர் அ.சிதம்பரநாதஞ் செட்டியார் தலைமை தாங்கினார். பாவேந்தர் பாரதிதாசன், சுத்தானந்தபாரதி, அன்புப்பழநி, திருச்சிற்றம்பலக் கவிராயர் முதலியோர் கலந்துக் கொண்ட கவியரங்கத்தில் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனும் கலந்துக் கொண்டு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.

கவிஞர் திலகத்தை பிற கவிஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் போது “இந்தக் கவிஞன் தமிழரோடு நிலைத்திருக்கப் பிறந்தவன்” என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தார் பாவேந்தர் பாரதிதாசனார்.

இதை அமைதியாக கேட்டிருந்த அக்கவியரங்கத் தலைவர் பேராசிரியர் சிதம்பர நாதஞ் செட்டியார் “வசிஷ்ட முனிவரே மஹரிஷி என்னும் போது நாங்களென்ன மறுக்கவா போகிறோம்?” என்று கூறி நம் கவிஞரை மேலும் பெருமை படுத்தினாராம்.

– அப்துல் கையூம்